உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வேணுகோபாலர் வீதியுலா

திருவள்ளூர் வேணுகோபாலர் வீதியுலா

திருவள்ளூர்: மப்பேடு, ராதா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் அடுத்த, மப்பேடு, உசேன் நகரத்தில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலை, கிராம மக்கள் சீரமைத்தனர். பணி முடிவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா, 20ம் தேதி நடந்தது. தொடர்ந்து, பல்வேறு அலங்காரம், பூஜை நடந்தது. கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !