உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் ரூ.40 லட்சம் வசூல்

சதுரகிரியில் ரூ.40 லட்சம் வசூல்

வத்திராயிருப்பு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பில் ரூ.40 லட்சம் வசூலானது. இங்குள்ள மலைக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 4 முறை உண்டியல் திறப்பு நடைபெறும். மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் , வெயிலால் காட்டுத்தீ பரவுதல் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக ,பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் உண்டியல் திறப்பு தள்ளிப்போனது. 6 மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் 34 லட்சம், ஒரு லட்சம் மதிப்பிலான தங்கம் ,வெள்ளி நகைகளும் வசூலாயின. சந்தனமகாலிங்கம் கோயிலில் ரூ.5 லட்சம் வசூலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !