சந்திவீரன்கூடம் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :2762 days ago
சிங்கம்புணரி சிங்கம்புணரியில் சந்திவீரன்கூடம் கோயில் கும்பாபிஷேகம் நாளை ஏப்.27 ம் தேதி நடக்கிறது. இக்கூடத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக அருள்பாலிக்கிறார். இக்கூடம் 2 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்தது. தற்போதுஅனைத்து பணிகளும் முடிந்து தேக்குமர சிற்பங்கள், பளிங்கு கண்ணாடிகள், புராண ஓவியங்கள் என கோயில் சிறப்பாக பழமை பளிச்சிடுகிறது. இக்கூடத்தின் கும்பாபிஷேகம் நாளை ஏப்.27 ம் தேதி காலை 9:45 மணியளவில் நடக்கிறது. இதற்கான யாக பூஜைகள் இன்று மாலை 5:00 மணி முதல் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், கிராமத்தார்களும் செய்துவருகின்றனர்.