மானாமதுரையில் ஆராதனை விழா நிறைவு
ADDED :2832 days ago
மானாமதுரை, மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி நிறைவு பெற்றது. மானாமதுரையில் நடந்த சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனை நடைபெற்றன. ஆராதனை கமிட்டி தலைவர் முஷ்ணம் ராஜாராவ், கவுரவ தலைவர் நாராயணஸ்வாமி, சங்கரசேது, செயலாளர்கள் வைத்யநாதன், ராதாபார்த்தசாரதி, ஜெய்சங்கர், பர்வதவர்த்தினி, பொருளாளர் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்,நிர்வாகிகள் முருகேசன், ராமையா, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.