அக்னி திருவிழா முகூர்த்தக்கால் நடல்
ADDED :2761 days ago
ஆத்தூர்: ஆத்தூர், தாயுமானவர் தெருவிலுள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், தேர் மற்றும் அக்னி திருவிழா, மே, 6 முதல், 29 வரை நடக்கவுள்ளது. அதற்கான, முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, கோவிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக, முகூர்த்தக்கால் கம்பத்தை ஊர்வலம் கொண்டுவந்து, பூஜை செய்து நட்டனர். இதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.