உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார் சுவாமி கோவிலில் நாளை தீமிதி திருவிழா

மன்னார் சுவாமி கோவிலில் நாளை தீமிதி திருவிழா

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகில் உள்ள எரிச்சனாம்பாளையம் மன்னார்சுவாமி பச்சைவாழியம்மன் கோவிலில் நாளை 27 ம் தேதி தீமிதி திருவிழாநடக்கிறது. விக்கிரவாண்டி வட்டம், எரிச்சனாம்பாளையத்தில் உள்ள மன்னார் சுவாமி பச்சைவாழியம்மன் கோவில் மகோற்சவ விழா, கடந்த 18ம் தேதி தொடங்கியது. தினந்தோறும் அபிேஷக ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை (27ம் தேதி) பகல் 12 :00 மணி முதல் 1:30 மணிக்குள் முருகர், தெய்வானை, வள்ளி திருக்கல்யாணம்; மதியம் 2:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு வீதியுலா, மாலை 5:30 மணிக்கு தீ மிதி திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !