திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :2762 days ago
திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் பக்தர்களுக்கு அருபலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர், வீரராகவர் பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவில் இன்று(ஏப்.,27) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வீரராகவர் தேரில் ஏழுந்தருள ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர். ஏப்ரல், 30ம் தேதியுடன், பிரம்மோற்சவம் நிறை வடைகிறது.