விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2762 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், தேன், திரவியபொடி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை செய்து; அருகம்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், மகாதீபாராதனை நடந்தது. அதில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.