உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை விழா: தேரோட்டம் கோலாகலம்

மதுரை சித்திரை விழா: தேரோட்டம் கோலாகலம்

மதுரை : மதுரை சித்திரை விழாவின் இன்றைய முக்கிய நிகழ்வாக மாசி வீதிகளில் தேரோட்டம் நடந்தது. சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா ஏப்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,25ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சிக்கும், சொக்க வைக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இன்றைய முக்கிய நிகழ்வாக மாசி வீதிகளில் தேரோட்டம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் எழுந்தருளினர். சிறந்பு பூஜைகளுக்கு பின் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !