திருத்தங்கல் கருநெல்லிநாதருக்கு திருக்கல்யாணம்
ADDED :2762 days ago
சிவகாசி, திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி, அம்பாளுடன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். 5ம் நாள் விழாவில் தங்க தேரோட்டம் நடந்தது. 6ம் நாள் விசேஷ அலங்காரத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா நடந்தது. 7ம்நாள் தபசுக்காட்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை,வேத மந்திரங்கள் முழங்கநடந்தது. மீனாட்சி -கருநெல்லிநாதர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.