உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

ராமநாதபுரம், ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்., 17ல் அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. ஏப்.18ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மன் மீனாட்சி அலங்காரம், காமாட்சி அலங்காரம், சிவ பூஜை அலங்காரம், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, முருகனுக்கு சக்திவேல் வழங்கும் காட்சி, திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டுதல், அம்மன் தபசு கோலம் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை 9:00 மணிக்கு மேல் சொக்கநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தாலி கயிறு, மஞ்சள் கிழங்கு வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை ஊஞ்சள் லலிதா சகஸ்ரநாம பாராயணமும், அடுத்த நாள் தீர்த்தவாரியும், சுவாமி திருவீதியுலா நடக்கிறது.

* மந்தைமாரியம்மன் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டிரஸ்டி கோகுலமுருகானந்தன், முன்னாள் கவுன்சிலர் நாகவள்ளி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !