உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் ஆனந்தவல்லி–சோமநாதர் திருக்கல்யாணம்

மானாமதுரையில் ஆனந்தவல்லி–சோமநாதர் திருக்கல்யாணம்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி–சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி–சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 20ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை 10:20 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் சுவாமிகள் மாலை மாற்றி கொண்ட பின் மதியம் 12:05 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பெண்கள்   தாலி கயிற்றை புதிதாக மாற்றி கொண்டனர். இன்று காலை 10:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !