உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன், முத்துகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன், முத்துகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர், அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் மீனாட்சிபுரத்தில் முத்தாலம்மன், முத்துகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் வேதமந்தரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெளிச்சநத்தம், மீனாட்சிபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலுார்: துரோபதையம்மன் கோயிலில் ஏப்.,25ல் கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்றாம் நாள் முடிவில் நேற்றுசிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி மற்றும் ராஜா தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பேரையூர்: சேர்வராயன்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. அம்மனுக்கு விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !