அழகர் இறங்கும் வைபவத்தில் தண்ணீர் பீய்ச்சுவது ஏன்?
ADDED :2828 days ago
மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் சடங்கு முக்கியமானது. பெருமாள் கோயிலில் நமக்கு தீர்த்தம் தருவார்கள். அழகர் வேடமணிந்த வர்களும் தண்ணீரை பீய்ச்சியபடியே தெருக்களில்வருவார்கள். அவர்களை அழகராகவே எண்ணும் பக்தர்கள் அவர்கள் பீய்ச்சும் தண்ணீரை தீர்த்தமாக கருதுகிறார்கள். அழகர் தீர்த்தம் நம்மை பரமபத வாசலுக்கு அழைத்துச் செல்லும் தன்மை உடையது.