உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி:சித்ரா பவுர்ணமி விழா

சின்னாளபட்டி:சித்ரா பவுர்ணமி விழா

சின்னாளபட்டி:சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு திரவிய அபிேஷகம் நடந்தது. வெற்றிலை, துளசி, வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், ஓம்கார விநாயகர், மூலவர், நந்திக்கு வேதி தீர்த்த அபிேஷகம் நடந்தது. மூலவருக்கு அன்னக்காப்பு, நாகாபரண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவசக்தி, பஞ்ச பூதங்கள், எட்டு திசைகள், 15 திதிகள், நவக்கிரகங்கள், 18 சித்தர்களுக்கான திருமறை வழிபாடு நடந்தது. விழாவில், ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.

* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், கோட்சார நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிேஷகம் நடந்தது. உள்பிரகாரம் முழுவதும் காய், கனி வகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தேவார, திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.* சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !