கூடலழகிய பெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி விழா
கூடலுார்:கூடலுாரில் பழமையான கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்தனர். நேற்று அண்ணல் பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். உற்சவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்டவைகள் மூலம் அபிேஷகம் நடத்தப்பட்டது. அர்ச்சகர் மாதவன் உச்சிகால பூஜை நடத்தினார். கொசவபட்டி பங்காளிகள் கும்பு கோயில் மாடு பிடித்து வந்து சுவாமிக்கு மரியாதை செலுத்தினர். இரவு, உற்சவர் ரத ஊர்வலம், ரதவீதிகள் வழியாக வந்தது. மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி ஆசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கள வாத்தியம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், கோனை கொம்பு, பொம்மை ஆட்டம் மற்றும் மாடு ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அண்ணல் பேயத்தேவர் ஆண் வாரிசுகள் ,சித்ரா பவுர்ணமி திருவிழாக்குழுவினர் செய்திருந்தனர்.