காக்கும் கரங்கள்
ADDED :2761 days ago
பாறையில் இருந்து பள்ளத்தில் விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே வேதனை. ஆனால், பாவம் எனும் பள்ளத்தில் விழுந்தால் மொத்த வாழ்வும் வேதனையே. தவறு செய்தவர்கள் சிலர், மனசாட்சியின் உறுத்துதலால் காலமெல்லாம் வேதனை அனுபவிப்பதை கண்கூடாகவே காண்கிறோம். இதில் இருந்து தப்பிப்பதற்கு ஒழுக்கமே வழி. ஒழுக்கமான வாழ்வில் இருந்து நழுவாதபடி நம்மை தாங்கிப்படிக்கும் கைகள் கர்த்தருடையது. “வழுவாதபடி காக்கவும்...” (யூதா 1:24) என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொண்டு, கர்த்தரிடம் ஜெபியுங்கள்.