சக்திமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :2755 days ago
வடமதுரை, அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா 3 நாட்கள் நடந்தது. மருதமுத்து சுவாமிகள் இல்லத்தில் இருந்து நகை பெட்டி அழைப்புடன் விழா துவங்கியது. பின்னர் பக்தர்கள் அம்மன் கரகம் ஜோடித்து பூக்குழி வழியாக கோயிலுக்குள் கொண்டு வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து அக்கினிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலங்கள் நடந்தன. இறுதி நாளான நேற்று அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் சித்ரா பவுர்ணமி விழா நிறைவடைந்தது.