உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புற்று மாரியம்மன் கோவில் திருவிழா

புற்று மாரியம்மன் கோவில் திருவிழா

தலைவாசல்: தலைவாசல் அருகே, புற்று மாரியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது. தலைவாசல், சிறுவாச்சூரில் அமைந்துள்ள புற்று மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று மதியம், பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். அம்மனுக்கு பாலாபி?ஷகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உருளுதண்டம் போட்டு, அக்னி சட்டி ஏந்தி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, அம்மன் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !