உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி விழா அம்மன் வீதி உலா

சித்ரா பவுர்ணமி விழா அம்மன் வீதி உலா

ஊத்துக்கோட்டை: சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, நிறைவு நாளில் உற்சவர் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ளது. ஓம்சக்தி ராஜேஸ்வரி அம்மன், பிரத்யங்கிராதேவி, ரேணுகா பரமேஸ்வரி கோவில். ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி விழாவில், அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், தீமிதி திருவிழா மற்றும் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம். இந்தாண்டு, சித்ரா பவுர்ணமி விழா, 24ம் தேதி அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  பின், ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 27ம் தேதி பால்குடம் எடுத்தல், 29ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தீமிதி திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மஞ்சள் நீராடுதல், காப்பு களைதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !