உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாசமான காணிக்கை!

வித்தியாசமான காணிக்கை!

கடலூருக்கு அருகே தெண்ணம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள அழகு முத்தைய்யனார் கோயிலிற்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை ஒரு மனுவாக எழுதி இங்குள்ள பூஜாரியிடம் கொடுத்து அதை ஒரு பெட்டியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு வந்து தங்கள் காணிக்கையாக காசோ, தேங்காய் பழமோ, அல்லது தங்களுடைய உருவ பொம்மைகளையோ காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். இந்தக் கோயிலைச் சுற்றிலும் இப்படிச் செலுத்தப்பட்ட பல ஆயிர உருவ பொம்மைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !