உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் இன்று சங்கடஹர சதுர்த்தி

விநாயகர் கோவில்களில் இன்று சங்கடஹர சதுர்த்தி

ஊத்துக்கோட்டை: விநாயகர் கோவில்களில், இன்று, சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், சங்கடஹர சதுர்த்தி விழா பிரசித்தி பெற்றது. இன்று, இவ்விழா நடைபெற உள்ளது. இன்று இரவு, 7:00 மணிக்கு மூலவர் கணபதிக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். பின், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்படும். இதேபோல், ஊத்துக்கோட்டை, ஐ.ஓ.பி., அருகில் உள்ள நாகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களிலும், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோவில் வளாகத்தில் உள்ள கணபதிக்கு, காலை, 10:00 மணிக்கு, இவ்விழா நடைபெறும். இதில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !