கோட்டை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கோட்டை விநாயகர் மற்றும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை யொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு கோட்டை விநாயகர், விமானம், ராஜகோபுரம், சிவசுப்பிரமணிய சுவாமி பரிவாரம் சகிதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிவசுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவை, சின்னவேடம்பட்டு குமரகுருபர சுவாமிகள் நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில், கோட்டை விநாயகர் ராஜகோபுர திருப்பணி தலைவர் குபேரன், கவுரவ தலைவர்கள் சோமசுந்தரம், முத்துகிருஷ்ணன், துணை தலைவர் ராஜசேகரன், குணசேகரன், செயலாளர்கள் காசிராஜன், ஜெயராமன், துணை செயலாளர்கள் கோபிநாத், ராஜேந்திரகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், துணை பொருளாளர்கள் சோளப்பன், ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், முருகதாஸ், நாகராஜ், அன்பழகன், தட்சணாமூர்த்தி, கோவிந்தன், ராஜ்குமார், சுந்தரம், சம்பத்குமார், பன்னீர்செல்வம், ஜனார்த்தனன், கருணாநிதி, சித்திரவேல், அண்ணாதுரை, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் பாஸ்கரசிவம், சிவாச்சாரியார்கள் தண்டபாணி, சந்திரசேகரன், நடராஜன், கணேசன், சுந்தரம், ரஞ்சித் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.