உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏதாநெமிலி யோகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஏதாநெமிலி யோகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்திலுள்ள யோகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஒலக்கூர் ஒன்றியம், வெள்ளிமேடுப்பேட்டை அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்திலுள்ள யோகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 30ம் தேதி கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மறுநாள் மாலை விக்னேஷ்வர பூஜை, முதற்கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7:.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோ பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. காலை 9:45 மணிக்கு கோவில், கும்பாபிஷேகம்நடந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளரும், ஏதாநெமிலி முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான சகாதேவன் மற்றும் நிர்வாகிகள் தணிகாசலம், சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், துரை, உதயசந்திரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !