சென்னிமலை அருகே ஒண்டிவீரன் கோவில் பொங்கல் விழா
சென்னிமலை: சென்னிமலை அருகே, மேற்கு வெப்பிலியில் உள்ள பட்டத்தரசி அம்மன் மற்றும் வாய்க்கால் மேடு ஒண்டி வீரன் சுவாமி கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம், 24 இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல், தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை படைக்கலம் மற்றும் மாவிளக்கு எடுத்து வருதல், அம்மை அழைக்க செல்லுதல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழிகள் பலியிட்டு ஒண்டி வீரன் சுவாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். பின்னர், பட்டத்தரசி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், உச்சி கால பூஜை நடந்தது. இன்று மதியம், 12:00 மணிக்கு மறுபூஜை, மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
* மேலப்பாளையம் முனியப்பன் சுவாமி கோவிலிலும், பொங்கல் விழா நடந்தது. ஏராளமானோர் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலிகொடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
* முருங்கத்தொழுவு அடுத்துள்ள, வாவக்காடு கருப்பணசாமி மற்றும் தன்னாசியப்பன் கோவிலில், நேற்று இரவு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலி கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.