முத்துமாரியம்மன் கோவில் கம்பம் திருவிழா
ADDED :2721 days ago
புன்செய்புளியம்பட்டி: டானாபுதூர், முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று சித்திரை கம்பம் திருவிழா நடந்தது. இதில், பக்தர்கள், அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். புன்செய்புளியம்பட்டி - அவினாசி சாலை, டானாபுதூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 16ல், கம்பம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு பூஜைகள் செய்து, கம்பம் நடப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு படைக்கலத்துடன் அம்மை அழைத்து வரப்பட்டது. பின்னர், பொங்கல் வைபவம் நடந்தது. ஏராளமானோர், அக்னி சட்டி எடுத்தனர். மாலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா, நாளை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.