பகவதி கோவிலில் இன்று தேரோட்டம்
ADDED :2721 days ago
கிருஷ்ணராயபுரம்: பகவதியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, அம்மன் தேர் பவனி இன்று நடக்கிறது. கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மலையாள பகவதியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று முன்தினம் மதியம், கோவில் முன் அக்னி குண்டம் அமைத்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, கோவில் முன் கிடா வெட்டுதல் நடந்தது. பின், திருத்தேருக்கு பூ மலை கொண்டு வந்து, தேர் கட்டும்பணி நடந்தது. இன்று காலை அம்மன் திருத்தேர் திருவீதி உலா நடக்கிறது. மாயனூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.