பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
ADDED :2721 days ago
கொடுமுடி: கொடுமுடி, கொந்தளம் கிராமம் கோட்டை காட்டு வலசு, பூசாரி பாளையம் பகவதி அம்மன் கோவிலில், நேற்று காலை, 6:40 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவில் முன், அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில், கொடுமுடி பிரகாஷ் சிவாச்சாரியார் பூஜை நடத்தினார். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு பூசாரி பாளையம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், காலை, 7:00 மணியளவில் கோட்டைகாட்டு வலசு பகவதியம்மன் கோவில், கோபுர கலசங்களுக்கு மகுடேசுவரர் கோவில் தலைமை குருக்கள் பிரபு சிவாச்சாரியார் மற்றும் பிரகாஷ் சிவாச்சாரியார், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கோவில் திருப்பணிக்குழு சார்பில், விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு, பிரசாத பையுடன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.