ராக்காச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2721 days ago
கீழக்கரை, திருப்புல்லாணி இந்திரா நகரில் சந்தன கருப்பண்ணசாமி, ராக்காச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 1 முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 10:30க்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை ஜெகநாத சாஸ்திரி, விஜய் குருக்கள் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் கருப்பையா, ராஜேந்திரன், களஞ்சியம், முத்து ஆகியோர் செய்திருந்தனர். *திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் உள்ள காளியம்மன், மணலுார் கருப்பசாமி ஆகிய கோயில்களில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தன. நேற்று காலை கும்பங்களில் புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.