உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா

நாகம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அருகே நாகம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்தது. நல்லகருப்பன்பட்டி, தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சிந்துவம்பட்டி, கோவில்புரம் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !