உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் பொன் ஏர் விடும் விழா

சிங்கம்புணரியில் பொன் ஏர் விடும் விழா

சிங்கம்புணரி:தமிழ் புத்தாண்டில் முதல் மழை பெய்ததைத் தொடந்து சிங்கம்புணரியில் பாரம்பரிய பொன் ஏர் விடும் விழா நடந்தது. தமிழ்ப்புத்தாண்டு தினத்துக்கு பிறகு பெய்யும் மழையை அந்தாண்டின் புது மழையாக விவசாயிகள் வரவேற்று, அதற்குப்பிறகு வரும் நல்ல நாளில் பொன் ஏர் விடுவது வழக்கம். மே 2, 3 தேதிகளில் இப்பகுதியில் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று பொன் ஏர் விடப்பட்டது. காலை 10:00 மணியளவில் சேவுகப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கோயில் நிர்வாகம், கிராமத்தார்கள் சார்பில் வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு ஊழியர்கள் கோயில் மாடுகளை பூட்டி ஏர் உழுதனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலங்களில் வழிபாடு நடத்தி முதல் பொன் ஏர் உழுதனர். இதனால் நல்ல மழையும், விளைச்சலும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !