உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுார் கோயிலில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லுார் கோயிலில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே குறவன்குளம் முனியாண்டிபுரம் எல்லம்மாள், தல கொண்டம்மாள், மகாகாளியம்மாள் மற்றும் கருப்பு சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு யாக சாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தன. நேற்று காலை புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுரகலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !