உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம் கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்: மழை பெய்ய வேண்டி நெல்லிக்குப்பம் பகுதி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோடை துவங்கியதுமே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கத்திரி வெயில் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், கத்திரி வெயிலின் தாக்கத்தை தவிர்க்க மழை வேண்டி நெல்லிக்குப்பம்  பூலோகநாதர் கோவிலில் 108  விளக்கு  பூஜையும்,  வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு 108 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !