கருணா சாயிபாபா கோவிலில் பிரதிஷ்டை தின விழா
செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் ஐந்தாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நடந்தது. செஞ்சி தாலுகா காரியமங்கலத்தில் உள்ள கருணா சாயி பாபா கோவிலில் ஐந்தாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி காலை 6.30 மணிக்கு கோபூஜையும், 7 மணிக்கு சங்கடஹர மஹா கணபதி ஹோமமும், மாலை 5 மணிக்கு 1008 கலசம் பிரதிஷ்டை செய்தனர். கடந்த 5ம் தேதி காலை 7 மணிக்கு கருணா சாயி பாபாவிற்கு ஏக தின லக்ஷஜப ஹோமம் நடந்தது. மாலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மஹாமிருத்தியுஞ்ஜய ஹோமம் நடந்தது. 8 மணிக்கு கஜ பூஜையும், 8.30 மணிக்கு யானை மீது கலச ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு கருணா சாயி பாபா மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் 1008 கலசாபிஷேகமும், 12 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.