துவாதச கணபதி தரிசனம்!
ADDED :2753 days ago
வேலூர், சேண்பாக்கம் பிள்ளையார் கோயிலில் நாம் பன்னிரண்டு கணபதி வடிவங்களைத் தரிசிக்கலாம். இந்தக் கோயிலில், செல்வ விநாயகர் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார் பிள்ளையார். சுயம்பு லிங்க வடிவத்திலிருக்கும் செல்வ விநாயகரைச் சுற்றிலும்.... பால விநாயகர், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வில்வ விநாயகர், சித்தி - புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் எனப்பதினோரு லிங்க வடிவ விநாயகர்கள் காட்சி தருகிறார்கள்.