யந்த்ர வடிவில் சனீஸ்வரர்!
ADDED :2753 days ago
ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது எரிகுப்பம் என்ற கிராமம். இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் காட்சியளிக்கிறார். ஐந்தரை அடி உயரம், ஒன்றரை அடி அகல யந்திரத்தின் மீது சூரியன், சந்திரன் மற்றும் கீழே காகம் வரையப்பட்டிருக்க, அறுகோண வடிவில் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரருக்கு உரிய மந்திரங்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. இந்த மந்திரங்களை நேரடியாக வாசிக்க இயலாது. கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் பார்த்துதான் வாசிக்க முடியும்.