திருக்கோயில் அற்புதங்கள்
ADDED :2753 days ago
கோயில்களில் பெரும்பாலும் வெண்கலம், பஞ்சலோகம், செம்பு அல்லது கல்லில் அமைக்கப்பட்ட மூர்த்தங்களே வழிபடப்படும். ஆனால், பூரி ஜகந்நாதர் கோயிலிலுள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரை ஆகியோரது மூர்த்தங்கள் மரத்தினால் செய்யப்பட்டவை. மைசூருக்கு அருகேயுள்ளது சாமராலு நகரம். இவ்வூரின் அருகே ஒரு மலையில் திகழும் பெருமாள் கோயிலில். சடாரிக்குப் பதில் இரண்டு அடிநீளம், ஓரடி அகலம் உடைய, தோலினால் செய்யப்பட்ட காலணியைத் தலை மீது வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்கள்.