திருவிழாத் தத்துவம்
ADDED :2753 days ago
கோயில்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச்சிறப்பாகப் பூஜைகள் நடத்தி, அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின்மேல் எழுந்தருளச் செய்து, கோயில் பிராகாரங்களிலும் வீதிகளிலும் நடத்தும் விழாவுக்குத் ‘திருவிழா’ என்று பெயர். இதனை ‘மகோற்சவம்’ எனவும் ‘பிரம்மோற்சவம்’ எனவும் கூறுவர். மஹாபெரிய உத் -உயர்வான, ஸவ - சிருட்டி முதலிய காரியங்கள். உயர்ந்த சிருட்டி முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாகும். ‘பிரம்மோற்சவம்’ என்பதற்குப் பெரிய திருவிழா என்பது பொருள்.