உடுமலை கோவிலில் சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2714 days ago
உடுமலை; உடுமலை ஆதிசக்தி விநாயகர் கோவிலில், அக்னி நட்சத்திர துவக்கத்தையொட்டி, சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. உடுமலை குட்டைத்திடல் மைதானம் அருகே, ஆதிசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்திலுள்ள, சிவலிங்கத்துக்கு, அக்னி நட்சத்திர துவக்கத்தையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், லிங்கத்துக்கு, வாசனை திரவியங்கள் அடங்கிய புனித தீர்த்தம் தொடர்ந்து படும்படி, சிறிய கலச அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.