சிறுபாக்கம் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :2714 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தில் முத்து மாரியம்மன், முத்தையா, பூமாலை , வேலடிகருப்பு சுவாமிகளின் தேர் திருவிழா, கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா, திருக்கல்யாணம், உள்ளிட்டவை நடந்தது. கடைசி தினமான நேற்று முன்தினம் அலகு குத்தியும், தீமிதித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக அம்மன் தேர் வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.