புது மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2716 days ago
பேரையூர், பேரையூர் அருகே சின்னகட்டளை சொர்ணமுத்து புது மாரியம்மன் கோயில் பொங்கல் விழா மே 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 6ல் தங்கத்
தேரில் அம்மன் நகர்வலம் நடந்தது. தீச்சட்டி எடுத்தல், கரும்பு தட்டையில் குழந்தை தொட்டில், உருண்டுகொடுத்தல், மாவிளக்கு என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.