பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா
ADDED :2716 days ago
சாயல்குடி, வடக்கு நரிப்பையூர் பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா நடந்தது. கடந்த மே 1 அன்று காப்பக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை தலைவர் பொன்னுச்சாமி,துணைத்தலைவர் முருகன், செயலாளர் கணேசபாண்டியன்,பொருளாளர் சவுந்திரபாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.