உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் விழா

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் விழா

காரைக்குடி, காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா நேற்று மாலை 6:33 மணிக்கு காப்பு கட்டுடன் தொடங்கியது. கல்லுக்கட்டி வில்வமரம் பகுதியிலிருந்து ’பிடி’ மண் எடுத்து வரப்பட்டு, அம்பாள் முன் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. இரவு 9:00 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. 17-ம் தேதி இரவு 11:00 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !