புனித சூசையப்பர் ஆலய விழா
ADDED :3038 days ago
செந்துறை, நத்தம் அருகே செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. கடந்த மே 6 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் பொங்கல் வைத்து சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடந்தது. நேற்று முன்தினம் பொதுப் பொங்கல் வைத்து, காலை மற்றும் இரவு ஆடம்பரத் திருப்பலி நடந்தது. நேற்று அதிகாலை புனிதர்களின் மின் அலங்கார தேர்பவனி நடந்தது. இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. திரளான கிறிஸ்தவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.