சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :2821 days ago
பவானி: அந்தியூர் அருகே, குருவரெட்டியூர் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன், முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா, கடந்த மாதம், 25ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா, நேற்று அதிகாலை நடந்தது. இதையொட்டி அம்மை அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம், பெரும்பூஜை நடந்தது. மாலையில் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.