வேணுகோபாலசாமி கோவில் வளாகத்தில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி தீவிரம்
ADDED :2745 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வேணுகோபாலசாமி கோவில், பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றங்கரை ஓரம், 1,300 ஆண்டுகள் பழமையான, வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கோவி லில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டு முடிந்து விட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் மக்கள் சார்பில், கோவிலில் மராமத்து பணி, பிப்.,11ல் தொடங்கியது. இந்நிலையில் கோபுரம் வர்ணம் பூசும் பணி முடிந்து, வளாகத்தை சுற்றிலும் தரைப்பகுதியில், பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் பணி முடிந்து, கும்பாபிஷேக விழா நடக்குமென்று, அதிகாரிகள் கூறினர்.