திருப்பரங்குன்றம் எண்ணெய் காப்பு விழா நிறைவு!
ADDED :5053 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிசுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நேற்றுநிறைவுற்றது.இவ்விழா கடந்த ஐந்து நாட்களாக நடந்தன. தெய்வானைக்கு கருமுடி சாத்துப்படி செய்து, மூலிகை எண்ணெய் தடவப்பட்டு, வெள்ளி சீப்பால் தலைவாரி, வாய் கொப்பளிப்பு செய்தல், தங்க ஊசியால் பல் துலக்குதல், மையிட்டு கண்ணாடி பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு விழாவான நேற்று தங்கப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளி அருள் பாலித்தார்.