கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பம் ஊர்வலம்
                              ADDED :2727 days ago 
                            
                          
                          கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்குவதையொட்டி, நேற்று காலை, கம்பம் ஊர்வலமாக கொண்டு சேர்க்கப்பட்டது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 18ல் பூச்செரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. தொடர்ந்து, 27, 28, 29ல், திருவிழா நடக்கவுள்ளது. இதையொட்டி நேற்று காலை, பாலம்மாள்புரத்திலிருந்து, மேளதாளத்துடன், கம்பம் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், எம்.எல்.ஏ., கீதா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.