மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2728 days ago
குளித்தலை: முத்துபாலசமுத்திரம், மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட, 51ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. காலை, 9:00 மணியளவில், கடம்பன்துறை காவிரி ஆற்றில் இருந்து, புறப்பட்ட இவ்வூர்வலம், கடம்பர்கோவில், நீதிமன்றம், பஸ் ஸ்டாண்ட், பேராளம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம் வழியாக, மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அதன் பின், மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி, நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு வந்தவுடன், அக்னி குண்டம் இறங்கி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர்.