திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மெகா தீபம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐந்து இடங்களில் மெகா தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்கோயிலில் பத்ரகாளி, வெற்றி விநாயகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி சன்னதிகள், திருவாட்சி மண்டபத்தில் பக்தர்கள் நெய் தீபம்,சனீஸ்வரர் சன்னதியில்எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு பின் கோயில்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தீபம் ஏற்ற அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பரங்குன்றம் கோயிலில் தற்போது மூன்று இடங்களில் மட்டுமே பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோயிலில் ஐந்து இடங்களில் மெகா தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மெகா கொப்பரை தயாரிப்பதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது. மெகா விளக்குகள் அமைக்கப்பட்ட பின் கோயில் சார்பில் நெய், எண்ணெய் விற்கப்படும். அதை பக்தர்கள் வாங்கி மெகா விளக்கில் ஊற்றி வழிபாடு செய்யலாம்.